மும்பை

ந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா காயமடைந்துள்ளதால் அவரால் விளையாட முடியாது என அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரரான ரோகித் சர்மா ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் தலைவராக உள்ளார்.   அவர் இந்த தொடரில் விளையாடும் போது காயம் ஏற்பட்டதால் அவர் மீதமுள்ள போட்டிகளில் விளையாடவில்லை.  தற்போது அந்த அணிக்கு பொல்லார்ட் தலைவராக செயல்பட்டு வருகிறார்.

சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா பெயர் இடம்பெறவில்லை.  அவருக்கு பதிலாக கே எல் ராகுல் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.   இது கிரிக்கெட் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, “ரோகித் சர்மா காயம் அடைந்துள்ளதால் அவரை மருத்துவக் குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.  இதில் எங்களால் தலையிட முடியாது.   மருத்துவர்கள் ரோகித் சர்மாவின் உடல்நிலை குறித்த அறிக்கையை தேர்வுக் குழுவினரிடம் அளித்து அதன் அடிப்படையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நான் அறிந்தவரை இப்போது அவர் விளையாடாமல் இருப்பது அவருக்கு நல்லதாகும்.   அவர் விளையாடினால் அவரே அந்த காயத்துக்கு அதிக பாதிப்பை உண்டாக்குவதாக ஆகும்.   நான் தேர்வுக் குழு உறுப்பினர் இல்லை என்பதால் இது குறித்து இதற்கு மேல் விளக்கம் அளிக்க முடியாது” என தெரிவித்துள்ளார்.