இயக்குநர் மோகன்.ஜி இயக்கத்தில் ரிச்சர்ட், ஷீலா நடிப்பில் வெளியான படம் ‘திரெளபதி’.
1 கோடி ரூபாய்க்கும் குறைவான பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இந்தப் படம் தமிழகத்தில் மட்டும் சுமார் 14 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. ஆனால், படத்திலிருந்த சர்ச்சையினால் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டாலும், தொலைக்காட்சி உரிமம் விற்பனையாகாமல் இருந்தது.
விழிப்புணர்வு உங்கள் இல்லங்களை வந்து சேரும்… #திரெளபதி in @vijaytelevision விரைவில் 💥💥💥 pic.twitter.com/3KnSreegST
— Mohan G Kshatriyan (@mohandreamer) October 31, 2020
இந்நிலையில் தற்போது, ‘திரெளபதி’ படத்தின் ஒளிபரப்பு உரிமையை விஜய் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது.