
பாலிவுட்டில் சுஷாந்த் சிங்கின் தற்கொலையை தொடர்ந்து, உடல்நல குறைவால் எஸ்.பி.பி, வடிவேல் பாலாஜி, மருத்துவரும் நடிகருமான சேதுராமன் என பலரின் இழப்புகள் ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது .
இந்த நிலையில், தற்போது தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் நவீன் சங்கர் காலமாகியுள்ளார்.
வில்லிவாக்கத்தைச் சேர்ந்த இவர் சாலிகிராமத்தில் மியூசிக் ஸ்டுடியோ வைத்திருந்தார்.
நவீன் சங்கர் ஒரு வாரமாக உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனிடையே தற்போது இவர் சிகிச்சை பலனின்றி காலமாகியிருப்பதாக தெரிய வந்துள்ளது.
2018-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் விசிறி. வெற்றி மகாலிங்கம் இயக்கிய இத்திரைப்படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றியவர் நவீன் சங்கர் என்பது குறிப்பிடத்தக்கது .
Patrikai.com official YouTube Channel