ஷார்ஜா: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் சரியாக 120 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது.
டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பந்துவீச முடிவுசெய்தது. இதன்படி களமிறங்கிய பெங்களூரு அணிக்கு, எதுவுமே நினைத்தபடி அமையவில்லை.
துவக்க வீரர் ஜோஷ் பிலிப் 31 பந்துகளில் 32 ரன்கள் மட்டுமே அடித்தார். தேவ்தத் படிக்கல் அடித்தது 5 ரன்கள் மட்டுமே. கேப்டன் கோலி 7 ரன்களுக்கு வெளியேறினார்.
டி வில்லியர்ஸ் 24 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் 21 ரன்களும் குர்கீரத் சிங் 24 பந்துகளில் 15 ரன்களும் அடித்தனர். கூடுதல் ரன்களாக 11 ரன்கள் அடிக்க, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்கள் மட்டுமே எடுத்தது பெங்களூரு அணி.
ஐதராபாத் அணி சார்பில் 4 ஓவர்கள் வீசிய நடராஜன், 1 விக்கெட் எடுத்து மொத்தமாக 11 ரன்கள் மட்டுமே வழங்கினார். சந்தீப் ஷர்மா 4 ஓவர்கள் வீசி 2 விக்கெட் எடுத்து, 20 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.