அறிவோம் தாவரங்களை – புளிச்ச கீரை செடி

புளிச்ச கீரை செடி. (Hibiscus cannabinus)

பாரதம் உன் தாயகம்! செம்பருத்தி செடி உன் தம்பி செடி!

புளிப்புச் சுவைக்குப் பெயர்போன புனிதக் கீரை செடி நீ!

செம்மண் நிலங்களில் செழித்து வளரும் பசுமைக் கீரை செடி நீ!

செம்புளிக்கீரை கரும்புளிகீரை என இரு வேறு பெயர்களில் விளங்கும் இனிய செடி நீ!

வெப்பத்தைத் தாங்கி வேகமாய் வளரும் பசுமைச் செடி நீ!

வெள்ளை புளிச்சை, சிவப்புப் புளிச்சை என இரு வேறு ரகங்களில் விளங்கும் இனிய செடி நீ!

தமிழ்நாடு, ஆந்திரா, மணிப்பூர், திரிபுரா, மிசோரம் மாநிலங்களில் அதிகம் வளரும் அற்புதச் செடி நீ!

ஆந்திராவில் நீ கோங்குரா!

ரத்த தூய்மை, வாத நோய், மஞ்சள் காமாலை,  சொறி, சிரங்கு, மலச்சிக்கல், தோல் நோய்கள், கட்டிகள், கோடை வெப்பம், நரம்பு தளர்ச்சி, இதய நோய், குடல் புண், மந்தம், அஜீரணம், ரத்த அழுத்தம், சிறுநீரகக் கோளாறு, சீதள நோய் ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத நிவாரணி நீ!

‘தேகசுத்தியாகும்; சிறு காசம் மந்தம் உறும்;போகம் உறும் விந்துவும் நல் புஷ்டியும் உண்டாம்…..புளிச்சகீரை உண்ணும்போது’ என அகத்தியர் குணபாடம் போற்றும் அற்புதக் கீரை செடி நீ!

கயிறு திரிக்க நார் தரும் கற்பக செடியே!

இரும்புச் சத்தும், சுண்ணாம்பு, சத்தும் நிறைந்த சத்துக் கீரை செடியே!

விதைகள் மூலம் இனவிருத்தி செய்யும் வினோதச் செடியே!

நிலக்கடலையின் விளையும் ஊடுபயிரே!

மாடித் தோட்டத்திலும் வளரும் மகிமை செடியே!

கூட்டு, துவையல், கடையல், ஊறுகாய், இலைச்சாறு, சட்னி, இட்லி, பொடி எனப் பல வகையில் பயன்படும் நல்வகைக் கீரை செடியே!

இலைக்காக வளர்க்கப்படும் இனிய செடியே!

நாப்கின் தயாரிக்கத் தண்டு தரும் நற்செடியே!

நீவிர் பல்லாண்டு வாழ்க! வளர்க! உயர்க!

நன்றி : பேரா.முனைவர். ச.தியாகராஜன்(VST)

முதல்வர்

ஏரிஸ் கலைக கல்லூரி,

வடலூர்.📱9443405050.