டில்லி

நாளை வானில் வரும் புளூமூனை மீண்டும் காண 30 வருடங்கள் ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை அக்டோபர் 31 ஆம் தேதி அன்று புளூமூன் நிகழ உள்ளது.  இதற்கு நிலவு நீல நிறத்தில் இருக்கும் எனப் பொருள் இல்லை.  ஒரே மாதத்தில் இரு முழு நிலவு தென்படும் போது இரண்டாவதாகத் தோன்றும் முழு நிலவுக்கு புளூ மூன் எனப் பெயராகும்.  இந்த மாதம் 1 ஆம் தேதி முழு நிலவு தோன்றி நாளை மாத முடிவில் மீண்டும் முழு நிலவு தெரிய உள்ளது.

முழு நிலவு தோன்றும் பவுர்ணமி மற்றும் நிலவே தெரியாத அமாவாசை ஆகியவை மாதம் ஒரு முறை நிகழும்.  ஒரே மாதத்தில் இருமுறை முழு நிலவு தென்படும் பவுர்ணமி வருவது ஆச்சரியமான நிகழ்வாகும்   அது தற்போது நடக்கும் மாதத்தில் நிகழ்கிறது.  இதற்கு முன்பு 2007 ஆம் வருடம் ஜூன் 30 ஆம் தேதி புளூமூன் தோன்றியது.

அடுத்த புளூமூன் நிகழ்வு வரும் 2050 ஆம் வருடம் செப்டம்பர் 30ல் நிகழ உள்ளது.  ஆகவே இத்தகைய புளூமூனை மீண்டும் காண மக்கள் இன்னும் 30 வருடம் காத்திருக்க நேரிடும்.  இந்த நிகழ்வின் போது நிலவில் எவ்வித மாறுபாடும் இருக்காது.  ஒவ்வொரு மாதமும் ஒரு முறை தோன்றும் முழு நிலவு இம்மாதம் இரண்டாம் முறையாக தோன்றுவது மட்டுமே ஆச்சரியம் ஆகும்.