திருவனந்தபுரம்: கேரளாவில் புதியதாக 5,457 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதார துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: இன்று மட்டும் புதியதாக 5,457 பேருக்கு கொரோனா தொற்று உறுதி உள்ளது.
அதன்மூலம் மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த பாதிப்பு 402,675 ஆக அதிகரித்து உள்ளது. மொத்தம் 3,09,032 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது 92,161 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.