‘’முத்து படத்தின் ‘பஞ்ச்’ வசனங்களை ரஜினிகாந்தே எழுதினார்’’ -மனம் திறக்கும் கே.எஸ். ரவிக்குமார்..
ரஜினிகாந்துக்கு ஜப்பானிலும் ரசிகர் மன்றம் அமையக் காரணமாக இருந்த படம் ‘முத்து’’.
மூன்று ’’ஆர்’’கள் –( ‘’RRR’’)  அதாவது  ரஜினிகாந்த், ரவிக்குமார், ரஹ்மான் ஆகியோர் இணைந்த முதல் படம்.
முத்து திரைப்படம் ரிலீஸ் ஆகி 25 ஆண்டுகள் ஆன நிலையில், அந்த படம் உருவான விதம் குறித்து சுவாரஸ்யமான நிகழ்வுகளைப் பகிர்ந்து கொள்கிறார், இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார்:
‘நான் டைரக்ட் செய்த  நாட்டாமை படத்தைப் பார்த்து அதன் தெலுங்கு உரிமையைத் தனது நண்பர் மோகன்பாபுவுக்கு வாங்கி கொடுத்தார், ரஜினி சார். தமிழில் விஜயகுமார் நடித்த வேடத்தில் , ரஜினி சார் தெலுங்கில் நடித்தார்.
அந்த சமயத்தில் அவரது ‘பாட்ஷா’ படம்  ரிலீஸ் ஆகி இருந்தது. அந்த படத்தைப் பார்க்க என்னை அழைத்தார்.
நானும் படம் பார்த்தேன். ‘’படம் சூப்பர் மாஸ் படம். ஆனாலும் ஏதோ குறை இருப்பதாகச் சொன்னேன். என்னுடன் படம் பார்த்தவர்கள் ஏளனம் செய்தனர்.ஆனால் நான் கூறிய கருத்தை ரஜினி சார் ஏற்றுக்கொண்டார்.
அந்த சந்திப்பு தான், எங்கள் தோழமையின் ஆரம்பம் என்று சொல்ல வேண்டும்.பிறகு என்னை ஒரு நாள் அழைத்து, தனக்காக ஒரு படம் இயக்க முடியுமா?’’ என கேட்டார்.. அப்போது நான் ‘பெரிய குடும்பம் ‘படத்தை டைரக்ட் செய்து கொண்டிருந்தேன். அது முடிந்ததும், இயக்குவதாக  ஒப்புக்கொண்டேன்.
பின்னர், மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘’ தேன்மாவின் கொம்பத்து’ படத்தின் மூலக்கதையை என்னிடம் சொன்னார். அந்த படத்துக்குத் தமிழில் திரைக்கதை அமைக்குமாறு பணித்தார்.
ஆனால் தேன்மாவின் கொம்பத்து படத்தை பார்க்க என்னை அனுமதிக்கவில்லை.
உட்லண்ட்ஸ் ஓட்டலில் ரூம் போட்டு திரைக்கதை எழுதினேன். திரைக்கதை தயாரானதும், ‘தேன்மாவின் கொம்பத்து’ படத்தை பார்க்குமாறு கூறினார்.
பார்த்தேன். போய் பாத்தா, அதுக்கும், இதுக்கும் சம்மந்தமே இல்லை.
ஒரு முதலாளி.. அவரிடம் வேலை பார்க்கும் தொழிலாளி. இருவரும் ஒரே பெண்ணை காதலிக்கும்  கருவை மட்டும்  வைத்துக்கொண்டு முத்து உருவானது.
சரத்பாபு நடித்த ராஜா வேடத்துக்கு முதலில்  அரவிந்த் சாமியை அணுகினேன். ‘நான் ரஜினி ரசிகன். ரஜினியைக் கன்னத்தில் அடிப்பது போன்ற காட்சியில் நடிக்க மாட்டேன் ‘’ என்று கூறி அவர்  மறுத்து விட்டார்.
ரஜினி சார் ஒரு படம் பண்ணுறார்னு, அத மனசில வச்சுத்தான் ‘டயலாக்’’ எழுதுவோம்.’’ முத்து படத்தில் இடம் பெறும்’ நான் எப்போ வருவேன்..எப்படி வருவேன்’’ வசனமாக இருந்தாலும் சரி, ‘’விக்கலு.. தும்மலு’’ வரியாக இருந்தாலும் சரி, அவரது ரசிகர்களை பெரிதும் ஈர்த்தது.
அந்த படத்தில் வரும் ‘’ கெடைக்கிறது கெடைக்காம இருக்காது.’’போன்ற ‘பஞ்ச்’’ வசனங்களை ரஜினி சாரே எழுதினார்.
மைசூரில் முதல் காட்சியாக ‘’ஒருவன் ஒருவன் முதலாளி’’ பாடலை படமாக்கினோம்.’’ என்று மனம் திறந்த ரவிக்குமார்.
– பா.பாரதி