லாக்டவுனுக்கு முன்பு நயன்தாரா, ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்தார் நயன்தாரா .
கொரோனா வைரஸ் பிரச்சனையால் தியேட்டர்கள் எல்லாம் மாதக் கணக்கில் மூடப்பட்டுள்ளதால் படங்களை ஓடிடி தளத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.


இந்நிலையில் மூக்குத்தி அம்மன் தீபாவளி பண்டிகை ஸ்பெஷலாக டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகவிருப்பதாக ஆர்.ஜே. பாலாஜி தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்தை ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்து என்.ஜே.சரவணனும் இயக்குநர் பொறுப்பைக் கவனித்திருந்தார்.
ஒளிப்பதிவாளராக தினேஷ் கிருஷ்ணன், இசையமைப்பாளராக கிரிஷ் கோபாலகிருஷ்ணன், சண்டை இயக்குநராக ஸ்டண்ட் சில்வா, எடிட்டராக ஆர்.கே.செல்வா ஆகியோர் பணிபுரிகின்றனர் .இந்தப் படத்தையும் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது.

[youtube-feed feed=1]