மும்பை: வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக ரூ. 10 ஆயிரம் கோடியை நிவாரணமாக மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்து உள்ளார்.

மகாராஷ்டிர ஆளும் கட்சி சார்பில் கூட்டணி தலைவர்களுடன் வெள்ள பாதிப்பு குறித்து இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆலோசனையில் துணை முதல்வர் அஜித் பவாரும் கலந்து கொண்டார்.
பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் உத்தவ் தாக்கரே பேசியதாவது: மத்திய அரசிடம் வெள்ள நிவாரணமாக ரூ. 38 ஆயிரம் கோரி இருந்தோம். ஆனால் மத்திய அரசு தரவில்லை. தீபாவளி போன்ற பண்டிகை வர உள்ளதால் ரூ. 10 ஆயிரம் கோடி வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வழங்கப்படும் என்றார்.
கடந்த வாரம் பலத்த மழை, வெள்ளம் காரணமாகவே, புனே, அவுரங்காபா, கொங்கன் பகுதியில் பலர் பலியாகினர். பல லட்சம் ஹெக்டேர் பரப்பிலான விளை நிலங்கள் சேதமடைந்துள்ளன.
Patrikai.com official YouTube Channel