நேற்று பிக்பாஸ் வீடு ஒரு ஆனந்த குடும்பம், பிக்பாஸ் வீடு ஒரு போட்டிக்களம் என இரண்டு தலைப்புகளை கொடுத்து பட்டிமன்றம் போல் பேச வைத்தார்.
நடுவராக இருந்த அர்ச்சனாவுக்கும், பாலாஜிக்கும் பட்டிமன்றத்தின்போது உரசல்கள் எழுந்தன. அர்ச்சனா ஒருதலை பட்சமாக பேசுவதாக பாலாஜி தெரிவிக்க அதெல்லாம் இல்லை என அர்ச்சனா மறுத்தார். மேலும் வீட்டில் சிறிய குழந்தைகள் இப்படிதான் பேசும் என்பது போல எடுத்துக்காட்டு ஒன்றை அவர் பாலாஜியை மேற்கோள் காட்டி கூறினார். இதைக்கேட்ட பாலாஜி நான் ஒண்ணும் கொழந்தை கெடையாது என்ன அப்படி சொல்லாதீங்க என நேரடியாகவே தெரிவித்தார்.
பின் மியூஸிக்கல் சேர் போட்டியில் வேல்முருகன் கண்ணை கட்டிக்கொண்டு பாட, மற்றவர்கள் ஆனந்தமாக விளையாடினர். இதில் முதலில் அவுட் ஆனவர் சனம் ஷெட்டி. இதையடுத்து வெளியே வந்த அவர் பாலாஜியை அழைத்து எனக்கும், உனக்கும் எப்பவுமே ஏழாம் பொருத்தமாக இருக்கிறது அதனால் என்னை புகழ்ந்து 10 பாயிண்ட் சொல்லு என்றார்.
இதையடுத்து பாலாஜி அலைபாயுதே மாதவன் ஸ்டைலில் சனமின் கையை பிடித்துக்கொண்டு பேசி முடித்தார்.
#Day19 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/vuVmnpexWj
— Vijay Television (@vijaytelevision) October 23, 2020
இந்நிலையில் இன்றைய தினம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களிடம் ஒரு டாஸ்க் கொடுக்கப்படுகிறது.அதன்படி 1-லிருந்து, 16 வரை போட்டியாளர்களை வரிசைப்படுத்தி கடைசியாக நிற்பவர் தான் இந்த வாரம் எலிமினேட் செய்யப்படுவார் என்று சொல்ல அதன்படி அனைவரும் சுரேஷை பதினாறாவது இடத்தில் நிற்க வைக்கின்றனர்.
#Day19 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/jYYwJRbmt7
— Vijay Television (@vijaytelevision) October 23, 2020
இரண்டாவது புரோமோவில் நேற்றைய தினம் பாலாஜி, அர்ச்சனா இடையே ஆரம்பித்த சண்டை தொடர்வதை காணமுடிகிறது. மேலும் பாலா அவரிடம் கோபமாக பேசுவதும் குறிப்பிடத்தக்கது.
#Day19 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/bysgxDanQg
— Vijay Television (@vijaytelevision) October 23, 2020