அறிவோம் தாவரங்களை – நஞ்சறுப்பான் கொடி

நஞ்சறுப்பான் கொடி. (Tylophora asthmatice Wt & Arn)

தென்னிந்தியா உன் தாயகம்! எல்லாவிதமான நஞ்சுகளையும் நீ முறித்து எடுப்பதால் நஞ்சறுப்பான் என அழைக்கப்படுகிறாய்!

வேலிகளில் படர்ந்துகிடக்கும் ஞான மூலிகைக் கொடி நீ!

கைப்புச்சுவையும் வெப்பத் தன்மையும் கொண்ட கொடி கொத்துப் பூக்கொடி நீ!

காகிதம், கொடிப்பாலை, கறிப்பாலை, அந்தமூல நஞ்சுமுறிச்சான்,   கொடிக் கொண்ணி எனப் பல்வேறு பெயர்களில் பரிணமிக்கும் ஒருபொருள்  குறித்த பலசொல் கிளவி நீ!

கோழை, சளி, சீதக்கழிச்சல், நீர்த்த கழிச்சல், தலைவலி, உடல் பருமன், மேகவாயு, மண்டைக் குத்தல், வயிற்றுப்போக்கு, காசநோய், கக்குவான், விஷக்கடிகளால் ஏற்படும் தோல் நோய்கள், அரிப்பு, தடிப்பு, வீக்கம், வரி மூர்க்கை ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத மூலிகை நீ!

இடுமருந்து,வசிய மருந்துகளுக்கான இனிய நிவாரணி நீ!

வியர்வையைப் பெருக்கும் விந்தைக் கொடியே!

ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தில் பயன்படும் அழகு கொடியே!

இலை, வேர் என எல்லாம் பயன்படும் நல்ல கொடியே!

முட்டை வடிவ விதைகளைக் கொண்டமூலிகைக்கொடியே!

ஆஸ்துமாவிற்கு ஏற்ற அற்புத மருத்துவப் பொடியே!

விஷக்கடிகளுக்கு ஏற்ற வினோதமூலிகைக்கொடியே!

சுற்றிப் படரும் பற்றுக் கொடியே!

மஞ்சள் நிறப் பூப் பூக்கும் மகிமைக் கொடியே!

இளஞ்சிவப்புக் கனி கொடுக்கும் இனிய கொடியே!

நீண்ட வேர்களை உடைய ஆண்டவனின் கொடையே!

நீவிர் பல்லாண்டு வாழ்க! வளர்க! உயர்க!

நன்றி :பேரா.முனைவர். ச.தியாகராஜன்(VST)

முதல்வர்

ஏரிஸ் கலைக் கல்லூரி,

வடலூர்.📱9443405050.