சென்னை
இன்று முதல் தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாகத் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறவில்லை.
மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.
முந்தைய தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் இறுதி மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டன.
தேர்வுத்துறை இயக்ககம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி இன்று அதாவது அக்டோபர் 23 முதல் மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
மாணவர்கள் தங்கள் பள்ளிகளின் மூலமும் தனித் தேர்வர்கள் தேர்வு மையம் மூலமும் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்.
மதிப்பெண் சான்றிதழ் பெற வரும் மாணவர்களும் தனித் தேர்வர்களும் அவசியம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும்.
தனிநபர் இடைவெளி போன்ற நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.