‘பாகுபலி’ யை தொடர்ந்து ராஜமவுலி இயக்கத்தில் உருவாகவுள்ள RRR திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்ற RRR பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிடப்பட்டது.
RRR படத்தில் ராம்சரண் மற்றும் Jr.NTR இருவரும் கதாநாயகர்களாக நடித்து வருகின்றனர்.
அஜய் தேவ்கன்,ஆல்யா பட்,சமுத்திரக்கனி என ஒரு மாபெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகை ஸ்ரேயா நடித்துள்ளார்.இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
கொரோனா காரணமாக தள்ளிபோடப்பட்ட படப்பிடிப்பு சமீபத்தில் மீண்டும் தொடங்கியுள்ளது.Jr NTR நடித்து வரும் பீம் என்ற கேரக்டரின் டீஸரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.