நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான்க்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை வீடியோக்கள் மூலம் தெரிவித்து வந்த நடிகை விஜயலெட்சுமி திருவான்மியூரில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் வாடகைக்கு அறை எடுத்து தங்கிவருகிறார்.
இந்நிலையில் 8 மாதமாக நடிகை விஜயலெட்சுமி தான் தங்கியிருந்த அறைக்கு 3 லட்சம் வரை வாடகை தரவில்லை என தங்கும் விடுதி உரிமையாளர் திருவான்மியூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
விடுதி அறையில் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது .