
கொரோனா தொற்றால் ஊரடங்கு காரணமாக பல படங்கள் OTT ல் வெளிவர தொடங்கியுள்ளது .
இதனால், என்ன செய்வதென்று தெரியாமல் பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்கள் நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பு பின்பு ஓடிடி வெளியீடு என்ற ரீதியில் பேச்சுவார்த்தையில் இறங்கின.
இந்நிலையில் ‘பூமி’ படத்தை சன் டிவி நிறுவனம் பெரும் விலைக் கொடுத்து கைப்பற்றி இருப்பதாக தெரிகிறது. தீபாவளி அன்று மாலை சன் டிவியில் ஒளிபரப்பிவிட்டு, அடுத்த நாள் முதல் சன் நெக்ஸ்ட்டில் இருப்பது போல ஒப்பந்தம் போட்டுள்ளது.
இது ஜெயம் ரவியின் 25-வது படம் என்பதால் பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்தது. தற்போது கொரோனா அச்சுறுத்தலால் இந்த முடிவை எடுத்துள்ளது ‘பூமி’ படக்குழு.
Patrikai.com official YouTube Channel