புதுடெல்லி:
ஆதாரம் இல்லை என்பதால் 20 வெளிநாட்டு தப்லிகி ஜமாஅத் உறுப்பினர்கள் மும்பை நீதிமன்றம் விடுவித்துள்ளது.
டெல்லி நிஜாமுதீன் மா்க்கஸ் பகுதியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற 3 வெளிநாடுகளைச் சோ்ந்த 541 போ்கள் மீது டெல்லி நீதிமன்றத்தில் 12 குற்றப் பத்திரிகையை காவல் துறை தாக்கல் செய்திருந்தது.
இவா்களில் 42 போ் மலேசியா, 85 போ் கிரிகிஸ்தானின் பல்வேறு பகுதிகளையும், 414 போ் இந்தோனேஷியாவின் பல்வேறு பகுதிகளையும் சோ்ந்தவா்கள் ஆவா்.
இவா்கள் அனைவரும் கொரோனா தொற்று தொடா்பாக மத்திய அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை மீறியது, நுழைவு இசைவு மோசடி, மதப் பிரசாரம் ஆகிய பிரிவுகளின் கீழ் இக்குற்றப்பத்திரிகையை பெருநகா் மாஜிஸ்திரேட் அா்ச்சனா பெனிவால் முன் டெல்லி காவல் துறையினா் தாக்கல் செய்திருந்தனர். இதையடுத்து, குற்றப்பத்திரிகையை பரிசீலனை செய்வதற்கான விசாரணையை கடந்த ஜூன் 25-க்கு நீதிபதி தள்ளி வைத்தார்.
ஏற்கெனவே டெல்லி நீதிமன்றத்தில் 20 நாடுகளைச் சோ்ந்த வெளிநாட்டினா் 82 போ் மீது 20 குற்றப்பத்திரிகையை டெல்லி காவல் துறையினா் தாக்கல் செய்திருந்தனா். அதைத் தொடா்ந்து, 294 போ் மீது புதிதாக 15 குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், 541 போ் மீது தற்போது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இதுவரை இந்த விவகாரத்தில் 915 பேருக்கு எதிராக 47 குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்துள்ளனா்.
மேற்கு டெல்லி, நிஜாமுதீன் பகுதியில் தப்லீக் ஜமாத்தின் தலைமையகமான அலமி மா்க்கஸ் பங்களேவாலி மசூதியில் மார்ச் மாதம் நடத்தப்பட்ட மாநாட்டில் வெளிநாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் இஸ்லாமிய மத போதகா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா். இதில் பங்கேற்றவா்களால் ஏராளமானோருக்கு கரோனா தொற்று பரவியதையடுத்து, மசூதிக்கு டெல்லி காவல் துறை சீல் வைத்தது. இதைத் தொடா்ந்து, டெல்லியில் உள்ள மசூதிகளில் காவல் துறை நடத்திய அதிரடி சோதனையில் மாநாட்டில் பங்கேற்ற வெளிநாடுகளைச் சோ்ந்த சுமார் ஆயிரம் போ் தனிமை முகாம்களில் வைக்கப்பட்டனா்.955 வெளிநாட்டினா் இடமாற்றம்: நிஜாமுதீன் மா்க்கஸ் பகுதியில் நடைபெற்ற மத நிகழ்ச்சியில் பங்கேற்ற நிலையில், தனிமையில் வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டின 955 போ்களை ஏவேறு இடத்தில் தங்கவைப்பதற்கு டெல்லி உயா்நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது.
இது தொடா்பான விவகாரத்தை விசாரித்த டெல்லி உயா்நீதிமன்றத்தின் நீதிபதிகள் விபின் சாங்கி, ரஜ்னீஷ் பட்நாகா் ஆகியோா் அடங்கிய அமா்வு, பல்வேறு வெளிநாட்டினா் தாக்கல் செய்த இரு மனுக்களை முடித்து வைத்து பிறப்பித்த உத்தரவில், 955 வெளிநாட்டினரும் அரசின் தனிமைப்படுத்தும் மையத்தில் இருந்து டெல்லியில் மனுதாரா்களால் யோசனை தெரிவிக்கப்பட்ட 9 பிரத்யேக இடங்களுக்கு இடமாற்றம் செய்யப்படுவார்கள் என தெரிவித்தது
இந்தநிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, 20 வெளிநாட்டு தப்லிகி ஜமாஅத் உறுப்பினர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று தெரிவித்த மும்பை நீதிமன்றம், அவர்களை விடுவித்தது.