வாஷிங்டன்:
முன்னாள் அமெரிக்க துணை தூதரான டிபி ஸ்ரீனிவாசன் அமெரிக்க ராணுவ வீரர்களின் தலையீட்டை பல நாடுகள் கோரிய சூழ்நிலைகளிலும், தனது படைகளை மற்ற நாடுகளுக்கு அனுப்பாத ஒரே ஜனாதிபதியாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எப்போதும் நினைவு கூறப்படுவார் என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்க தேர்தல்கள் என்ற தலைப்பில் கொள்கை மற்றும் மேம்பாட்டு ஆய்வுகளுக்கான மையம் ஏற்பாடு செய்த வெபினாரில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமெரிக்க துணைத் தூதரான டிபி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளதாவது: அமெரிக்க ஜனநாயக கட்சியின் சார்பில் கமலா ஹாரிஸ் துணை தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்பு அமெரிக்க தேர்தல்களில் இந்திய நாட்டின் ஆர்வம் பல மடங்கு அதிகரித்துள்ளது.

அதற்கு ஏற்றார்போல் ஜோபிடனும் கருத்து கணிப்புகளில் முன்னேறி சென்று கொண்டிருக்கிறார், ஜோ பிடன் அடுத்த ஜனாதிபதி ஆவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்து வருகிறது.

மேலும் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் டொனால்ட் ட்ரம்ப் தோல்வியடைந்துள்ளார், கொரோனாவுக்கு எதிரான அவருடைய நடவடிக்கைகள் மிகவும் கண்டிக்கத்தக்கதாக இருந்து வருகிறது, கொரோனாவுக்கு எதிராக சரியான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை பாதியாக குறைத்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் முன்னாள் ஜனாதிபதி பாரக் ஒபாமா மற்றும் தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்புடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சிறந்த நண்பராக விளங்கியது, இருநாடுகளுக்கும் நல்ல நட்பை ஏற்படுத்தியுள்ளது. நடக்கவிருக்கும் அமெரிக்க தேர்தல்களில் இந்தியர்களின் எதிர்பார்ப்பும் அதிகமாகவே உள்ளது, இதற்கான விடையை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் என்று சீனிவாசன் தெரிவித்துள்ளார்