கோபன்ஹேகன்: டென்மார்க் ஓபன் பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் ஜப்பானின் ஒகுஹரா.
பெண்கள் ஒற்றையர் இறுதியில், ஜப்பான் நாட்டின் ஒகுஹரா மற்றும் ஸ்பெயின் நாட்டின் மரின் கரோலினா மோதினர்.
இப்போட்டியில், முதல் செட் 21-19 என்ற புள்ளிகள் அடிப்படையில் ஒகுஹரா வசமானது. அதேசமயம், இரண்டாவது செட்டும் 21-17 என்ற புள்ளிக் கணக்கில் இவரின் வசமாகவே, போட்டியை வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
இந்தப் போட்டி மொத்தம் 56 நிமிடங்கள் நீடித்தது.