
அபுதாபி: கொல்கத்தா அணிக்கெதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது மும்பை அணி.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்களை எடுத்தது. அந்த அணியின் பாட் கம்மின்ஸ் 36 பந்துகளில் 53 ரன்களை அதிகபட்சமாக அடித்தார்.
பின்னர், எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணியின் துவக்க வீரரும் கேப்டனுமான ரோகித் ஷர்மா, 36 பந்துகளில் 35 ரன்களை மட்டுமே அடித்தார்.
அதேசமயம், மற்றொரு துவக்க வீரரான குவின்டன் டி காக், 44 பந்துகளில் 78 ரன்களை அடித்தார். இதில் 3 சிக்ஸர்கள் & 9 பவுண்டரிகள் அடக்கம்.
சூர்யகுமார் யாதவ் 10 ரன்களும் ஹர்திக் பாண்ட்யா 11 பந்துகளில் 21 ரன்களும் அடித்து வெற்றியை உறுதிசெய்தனர்.
இறுதியில் 16.5 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 149 ரன்களை எடுத்து வென்றது மும்பை அணி.
Patrikai.com official YouTube Channel