மேஷம்

வாயை இறுகத் தைத்துக்கொண்டு பேச்சை அடக்கினால் நல்லதுங்க. சுளீர் சுளீர் என்று நாக்கைச் சாட்டைபோல் சுழற்றாதீங்கப்பா. அது பூமராங் மாதிரி செயல்படும். நீங்க நல்லது பேசினால் அதன் நற்பலன் உங்களுக்கும் உண்டு என்பதை நினைவுல வெச்சுக்குங்க. பிரபலங்களின் தொடர்பு கிடைக்கும். அதை மிகக் கவனமாகப் பயன்படுத்துங்க. உடனே உதவி கேட்டு அவங்ககிட்ட போய் நிக்காதீங்க. சான்றோர்களின் ஆலோசனைக்குத் தகுந்த பலன் கிடைக்கும். சந்தோஷம் அதிகரிக்கும். பெற்றோர் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வாகனமாற்றம் பற்றி சிந்திப்பீங்க. பணப்புழக்கம் அதிகரிக்கும். பக்கபலமாக இருப்பவர்களால் ஏற்பட்ட சிக்கல்கள் அகலும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சிக்கு, தொகை கேட்ட இடத்திலிருந்து கிடைக்கும். பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும். எந்தச் சூழ்நிலையிலும் நிதானத்தை இழந்து விட வேண்டாம் கோபத்தோடு பேச வேண்டாங்க. ப்ளீஸ்.. கைண்ட்லி..

சந்திராஷ்டமம் :  அக்டோபர் 19 முதல்  அக்டோபர் 21 வரை

ரிஷபம்

வளர்ச்சி கூடும் வாரம். வழக்குகள் சாதகமாகும். நம்பிக்கைக்குரியவர்கள் சில காரியங்களை முடித்துக் கொடுப்பர். குடும்ப நலன் கருதி எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும். மனைவியின்/ கணவரின் முன்னேற்றம் உங்களையும் உங்க குடும்பத்தி உள்ளவங்களையும் சந்தோஷ அருவியில் குளிக்கச் செய்யுமுங்க. எந்த முயற்சியுமே உடனுக்குடன் பலனளிக்கும். சிறிது முன் வரை இருந்து  வந்த மந்த நிலையும், நிதானப்போக்கும் இருக்காது. பயமோ டென்ஷனோ வேண்டாங்க. நட்பால் நல்ல காரியம் நடைபெறும். நாள்பட்ட கடன்கள் வசூலாகும். உடன் பிறப்புகள் உறுதுணை புரிவர். நிதி நிலை உயரும். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். உங்களின் முகப்பொலிவு கூடும். பண வரவு அதிகரிக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். இந்த வாரம் மேன்மையான வாரமாக அமைந்துள்ளது. சந்தோஷம் அதிகரிக்கும் வீட்டில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும். யார் பற்றியும் யாரிடமும் வம்பு பேச வேணாங்க. வீண் பழி வரும் நிகழ்ச்சிகள் செய்ய வேண்டாம். ப்ளீஸ் டோன்ட்.

மிதுனம்

நீண்ட போராட்டத்திற்குப் பிறகு புதிய வேலை கிடைக்கும். உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். நோய் தொற்று காலம் என்பதால் உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். பிதுர்ராஜ்ஜித சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வியாபாரிகள் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருப்பது அவசியம். கடன் கொடுத்து விட்டு அப்புறம் திரும்ப வரவில்லை என்று வருத்தப்பட வேண்டியிருக்கும். உடன் பிறந்தவர்களின்மதிப்பும், மரியாதையும் உயரும். எடுத்த காரியத்தை எளிதில் முடித்து வெற்றி காண்பீங்க. வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு உண்டு. எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு போன்றவை கிடைக்காவிட்டாலும், அதற்கு இணையான பல நன்மைகளை இப்போது அமையும். தொழில் துறையில் இருப்பவர்கள், வளர்ச்சியைக் காண்பீங்க. வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவது மிகவும் சுலபமாய் இருக்கும்.  வேலைப்பளு அதிகரித்தாலும், அதற்கேற்ற வருவாய் கிடைக்கத்தான் செய்யும்.  எனவே டோன்ட் ஒர்ரி!

கடகம்

நியாயத்துக்கும் நேர்மைக்கும் புறம்பான காரிங்களைச் செய்யும்படி உங்களை யார் வற்புறுத்தினாலும் பெரிய எழுத்தில் “நோ” சொல்லிடுங்க. அது பிறகு உங்களை விடாமல் பிடிச்சுக்கிட்டா எதிர்காலம் என்னங்க ஆறது? சவாலாக தெரிந்த சில வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீங்க. மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். நன்மை நடக்கும். முன்யோசனையுடன் செயல்படுவதன் மூலம் முன்னேற்றம் கிடைக்கும். முகஸ்துதிக்கு மயங்காமல் இருப்பது நல்லது. உற்றார், உறவினர்கள் உங்கள் முன்னேற்றம் கண்டு ஆச்சரியப்படுவாங்க. நிறைய நற்காரியங்கள் நடைபெறும். எதையும் தைரியமாக எதிர்கொள்வீங்க. பணம் விசயத்தில் கவனம் தேவை. எடுத்த முயற்சி கைகூடும். வழக்குகளில் வெற்றி கிட்டும். குட் சக்ஸஸ்.

சிம்மம்

யோகமான வாரம். கூட்டுத் தொழில் செய்பவர்கள், வியாபாரத்தின் மூலமாக வரும் லாபத்தை அதிக அளவில் எதிர்பார்க்கலாம். அதேவேளையில் வாடிக்கையாளர்களுக்கு கடன் கொடுப்பதை தவிர்க்கவும். அது உங்களின் பொருளாதார நிலைமையை கட்டுக்குள் வைத்திருக்கும். குடும்பத்தை பொறுத்தவரை கணவன்- மனைவி இடையே இனிமையான சூழ்நிலை காணப்படும். புனிதத் திருத்தலத்திற்கு குடும்பத்தோடு பயணிக்கும் வாய்ப்பு உருவாகும். வடமேற்கு திசையிலிருந்து ஒரு நற்செய்தி தேடி வரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள்  கிடைக்கும். கல்விக்காக எடுத்த முயற்சி கைகூடும். உடல் நலம் சீராக ஒரு தொகையைச் செலவிடுவீங்க. பயணத்தால் பலன் உண்டு. நல்ல தன லாபம் வரும். பெற்றோர்கள் உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். புதிய முயற்சிகள் எதுவும் இப்போதைக்கு செய்ய வேணாங்க. டோன்ட் டூ.

கன்னி

பாஸ்போர்ட்டுக்காகக் காத்திருந்தவர்கள் அது கிடைத்து மகிழ்ச்சியின் உச்சத்தில் இருப்பாங்க. தந்தைக்கு ஏற்பட்டிருப்பதெல்லாம் தற்காலிகமான பிரச்சினைகள்தான். பெரிதாக எண்ணி பயப்படாதீங்க. வாக்கினால் நன்மை ஏற்படும், குடும்பத்தில் சுப நிகழ்வு உண்டு. . பெற்றோரை மகிழ்விக்கும் வண்ணம் அவர்கள் நடந்துகொள்வாங்க. சுபவிரயங்கள் ஏற்படும். சுற்றத்தார்களுக்கு உதவி செய்ய முன்வருவீங்க. திடீர் பயணங்களால் சில நல்ல காரியங்கள் நடைபெறும். வேலை செய்யும் இடத்தில் அதிகாரிகளின் ஆதரவும் புதிய வாய்ப்புகளும் தேடி வரும். திடீர் கௌரவ பதவிகள் தேடி வரும். அதிகம் கோபப்பட வேணாம். பேச்சிலும் செயலிலும் நிதானம் தேவை. இடமாற்றம், உத்தியோக மாற்றம் பற்றி யோசிப்பீங்க. சுற்றத்தார்களுக்கு உதவி செய்ய முன்வருவீங்க. பூனை மாதிரிப் பதுங்கியிருந்த நீங்க, நல்ல காரணங்களுக்குப் புலி மாதிரிப் பாய்வீங்க. குட் லக்.

துலாம்

சந்தோஷங்களைச் சந்தித்து மகிழும் வாரம். தனவரவு திருப்தி தரும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். தொழில் ரீதியாக புது முயற்சி எடுப்பீங்க. தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சியைத் தரும்.நிதி நிலையை பொறுத்தமட்டில் இந்த வாரம் ரொம்பவே சிறப்பாக அமையும். அதிகப் பணம் சம்பாதிப்பீங்க. அது மிக நேர்மையான வழியில் இருக்கும். மனதில் நல்ல எண்ணங்களும் இறை சிந்தனையும் அதிகரிக்கும். வாதங்களைக் குறைச்சுக்குவீங்க. மாணவர்களின் கல்வி ஈடுபாடும் சுறுசுறுப்பாக இருக்கும். துணையாக இருப்பவர்கள் தோள் கொடுத்து உதவுவாங்க. பொருளாதார வளர்ச்சி திருப்தி தரும் . இருப்பினும் செலவுகளும் அதிகரிக்கும். அரசியல் வாதிகளின் ஆதரவு கிடைக்கும். பொருளாதார ரீதியாக வரவு செலவு சரியாக இருக்கும். புகழ் அந்தஸ்து அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். உடல் நிலை பாதிப்புகள் வராமல் இருக்க மருந்து மாத்திரைகளை கவனமாக சாப்பிடுங்கள். ப்ளீஸ் பி கேர்ஃபுல்.  

விருச்சிகம்

நண்பர்கள் சூப்பரா உதவுவாங்க. குறிப்பாக எதிர்பாலினத்தினர் உங்களுக்காக மனப்பூர்வமாக நன்மைகள் செய்வாங்க. அதை நன்றியுடன் நினைவில் கொள்ளுங்க.  குழந்தைகளுக்கு அரசாங்க நன்மைகள் கிடைப்பது ஒரு புறம் இருக்கட்டும். உங்களுக்கே அரசாங்கத்தால் லாபம் உண்டுங்க. அரசியல்வாதிகள் பல ஊர்களுக்குப் பயணம் செய்வீங்க. அதனால் நன்மையும் உண்டு. கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீங்க. தொழிலை விரிவு செய்யும் முயற்சி கைகூடும். புதிய முதலீடுகள் செய்ய முன்வருவீங்க. மனதில் இனம் புரியாத சந்தோஷம் குடிகொள்ளும். தாராளமாகச் செலவிட்டு மகிழுவீங்க. தக்கவிதத்தில் புதிய தொழில் தொடங்குவதற்கான ஏற்பாடுகளை செய்ய முன்வருவீங்க. பழைய கடன்களை கொடுத்து மகிழும் வாய்ப்பு கிட்டும். தொழில் வியாபாரம் இந்த வாரம் அற்புதமாக இருக்கிறது. குடும்பத்தில் மூத்த சகோதரியின் ஆதரவு கிடைக்கும். நைஸ் திங். ஹாப்பி?

தனுசு

புதிய நண்பர்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் வாரம். இடம்  வாங்குவதில், விற்பதில் இருந்த தடுமாற்றங்கள் மாறும். அரசியல் வாதிகளால் நன்மை உண்டு. வருமானம் திருப்தி தரும். குழந்தைங்க உங்களைப் பெருமிதம் அடையச் செய்யுமளவு சாதனைகள் செய்து பாராட்டு வாங்குவாங்க. தயவு செய்து இப்போதைக்கு வேறு வேலை மாறுவது பற்றி நினைச்சும் பார்க்காதீங்க. . பங்கு சந்தையில் இருந்து தள்ளி இருப்பது இப்போதைக்கு நல்லதுங்க.  கூடிய விரைவில் நற்பலங்களை எதிர்ப்பார்க்கலாம். சிறு சங்கடங்கள் ஏற்படும். எதிர்பாராத விரயங்கள் உண்டு. கோபத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது. உடல் நலனுக்கு ஒவ்வாத உணவுகளை தவிர்க்கவும். யோசித்துச் செயல்படணுங்க. திட்டமிட்ட காரியங்களில் மாற்றம் செய்வீங்க. வரவைக் காட்டிலும் செலவு கூடும். நட்பு, பகையாகாமல் பார்த்துக் கொள்வது பெட்டர். யெஸ்.  வெரிமச்.

மகரம்

உங்கள் திருமண வாழ்வை இனிமையாக்குவதுடன் உங்கள் அன்புக்குரியவருடன் இனிமையான பொழுதினை செலவிப்பீங்க. அரசுத் துறையில் இருப்பவர்கள் சில சிக்கல்களை சந்திக்க நேரலாம். வணிகர்களுக்கு லாபம் உடனடியாகக் கிட்டாமல் போனாலும் நிரந்தரமாகக் கிட்டும். காதல் வாழ்வில் மகிழ்சி பொங்கும். மன அமைதியிருந்தால் எதையும் சாதிப்பது எளிது. மருத்துவத் துறையிலும் கட்டத்துறையிலும் உள்ளவங்களுக்கு நன்மை உண்டு. வருமானம் உயர வழி பிறக்கும். வசதிகள் பெருகும். நினைத்த காரியத்தை முடித்து நிம்மதி காண்பீங்க. குழந்தைகளின் கல்வி நலனில் அக்கறை செலுத்துவது நல்லது. பணியாளர் தொல்லை அகலும். பணத் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சிகளில் ஆதாயம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதலாக கிடைக்கும். திடீர் பயணங்களால் சில நல்ல காரியங்கள் நடைபெறும். இடமாற்றம், உத்தியோக மாற்றம் பற்றி யோசிப்பீங்க.

கும்பம்

உடல் நலன் பல மாதங்களுக்குப் பிறகு  இந்த வாரம் மேம்படும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்று கொள்வாங்க. அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அதிகார பதவியில் உள்ளவர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சியால் லாபம் அடைவீங்க. உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்து கொள்வாங்க. தொட்டது துலங்கும். கனவுகள் நனவாகும். காரிய வெற்றிக்கு உடன் பிறப்புகள் உதவிக்கரம் நீட்டுவர். கூட்டு முயற்சிகளில் மாற்றம் ஏற்படும். குழந்தைகள் நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நீங்கள் சாமர்த்தியசாலிகள், மங்களகரமான சுப காரியங்கள் கைகூடி வரும். பண வரவுகள் சிறப்பாக இருக்கும். கடன் சுமை குறைய நண்பர்கள் கைகொடுத்து உதவுவர். வார ஆரம்பத்திலேயே கலகலப்பான தகவல் வந்து சேரும். இனிமையான வாரமாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். வெளியூர் பயணங்கள் சாதகமாக இருக்கும். புத்திரபாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். கங்கிராஜுலேஷன்ஸ்.

சந்திராஷ்டமம் :  அக்டோபர் 14 முதல்  அக்டோபர் 17 வரை

மீனம்

அலுவலகத்தில் பெரிய முன்னேற்றங்களை எதிர்பார்க்க முடியாதுங்க. நத்தை அல்லது  ஆமையின் வேகத்தில்தான் எல்லாமே நடக்கும். பரவாயில்லை. விடுங்க. கூடிய சீக்கிரத்தில் எல்லாமே தானாய்ச் சரியாகும். உடன் பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் வாரம். தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபட வேணாம். எளிதில் தூண்டிவிடப்படுபவர்கள் நீங்கள் ஆனால் அதனால் எந்த சாதகமும் ஏற்படப்போவதில்லை பல காலமாகத் திட்டமிட்டிருந்த கோயில் குளம் / வழிபாட்டுத் தலங்கள் மற்றும் குலதெய்வப் பயணங்கள் தடைப்பட்டாலோ, தாமதமானாலோ கவலை வேணாங்க. இந்தத் தடை கூடிய விரைவில் நீங்கும். உற்சாகத்தோடு பணி புரிவீங்க. கணவன் மனைவி இடையே சண்டை வராமல் பார்த்துக்குங்க. தொழில் ரீதியாக இருந்த பிரச்சினைகள் நீங்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு தேடி வரும். எதையும் வெளிப்படையாக பேச வேணாங்க. வாக்குக்கொடுத்து மாட்டிக்கொள்ள வேணாம். ப்ளீஸ் டோன்ட்.

சந்திராஷ்டமம் :  அக்டோபர் 17 முதல்  அக்டோபர் 19 வரை