சென்னை

சுமார் 6 மாதங்களுக்குப் பிறகு ஆம்னி பேருந்து சேவை நாளை முதல் தொடங்க உள்ளதால்  சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக கொரோனா ஊரடங்கு காரணமாக ஆம்னி பேருந்துகள் இயக்கம்  நிறுத்தப்பட்டுள்ளன.

தற்போது பண்டிகைக்காலம் நெருங்கி வருவதால் ஆம்னி பேருந்துகளை நாளை முதல் இயக்க பேருந்து உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

இதில் முதல் கட்டமாகத் தமிழக பதிவு எண் கொண்ட் பேருந்துக்க்ளில் 500 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

சென்னை கோயம்பேட்டில் உள்ள ஆம்னி பேருந்து நிலையத்தில் பேருந்துகளைச் சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழக அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றி ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக உரிமையாளர்கள் கூறி உள்ளனர்.