கோவை: தமிழக வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் அதன்கீழ் உள்ள வேளாண் கல்லூரிகளில் இளநிலை வேளாண் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாக இருந்த நிலையில், தற்போது, வரும் 23ந்தேதி வெளியாகும் என கோவை வேளாண் பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது.
அதுபோல, சிறப்பு ஒதுக்கீடுகளுக்கான தரவரிசைப் பட்டியல் அக்டோபர் 28ந்தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக டீன் டாக்டர் கல்யாணசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வேளாண்படிப்புக்கு ஆன்லைன் மூலம் இளநிலை படிப்புகளுக்கு சுமார் 50ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும், விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே அறிவித்தபடி இன்று (15/10/2020) அன்று தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படவில்லை என்றும், தரவரிசைப் பட்டியல் வரும் 23ந்தேதி வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதைத்துதொடர்ந்து

Patrikai.com official YouTube Channel