
விருமாண்டி இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடித்த க/பெ.ரணசிங்கம் படம் ஓடிடியில் வெளியானது. படத்தை பார்த்தவர்கள் இன்று வரை சமூக வலைதளங்களில் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் க/பெ.ரணசிங்கம் படத்தின் கதை திருடப்பட்டதாக புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே இருக்கும் தீத்தான் விடுதியை சேர்ந்த எழுத்தாளர் மிடறு முருகதாஸ் கறம்பக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
நான் எழுதி கடந்த 2017ம் ஆண்டு கதை சொல்லி மாத இதழில் வெளியான தவிப்பு என்ற கதையை மையமாக வைத்து க/பெ.ரணசிங்கம் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த கதை 2018ம் ஆண்டு நான் வெளியிட்ட தூக்கு கூடை என்ற புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது.