இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை பாகுபாடு இல்லாமல் அனைவரையும் தாக்குகிறது .
இந்நிலையில் , ஐதராபாத்தில் நடைபெற்று வந்த வெப் தொடரின் படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகை தமன்னாவுக்கு கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டது. இதையடுத்து பரிசோதனை செய்தபோது அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து ஐதராபாத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் தமன்னா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் .
முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் தமன்னாவின் பெற்றோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கொரோனாவில் இருந்து மீண்டுள்ள அவர் மும்பையில் உள்ள வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு வீட்டுக்குள் காரில் வந்து இறங்கியதும் அவர் பெற்றோர், தமன்னாவைக் கட்டித்தழுவி வரவேற்கின்றனர். பின்னர் அவர் வீட்டுக்குள் செல்லும்வரை வீடியோவாக அவர் உறவினர் எடுத்துள்ளார்.
https://www.instagram.com/p/CGVBUwejUIS/
அதில் அவர், கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு விட்டேன். 14 நாள் தனிமைக்குப் பிறகு வீட்டுக்கும் திரும்பி விட்டேன். நான் நலம்பெற பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கும் நலம் விரும்பிகளுக்கும் நன்றி’ என்று கூறியுள்ளார் நடிகை தமன்னா. வீட்டில் செல்ல நாய்க்குட்டி, அவர் வருகைக்கு காத்திருந்தது போல அவரைத் தேடி ஓடிவருகிறது.
அதைக் கொஞ்சுகிறார், தமன்னா. அந்த செல்லக்குட்டி, மல்லாக்கப்படுத்து அவருடன் விளையாடுகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

[youtube-feed feed=1]