
‘பட்டாஸ்’ படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், தனுஷ் நடித்திருந்த படம் ‘ஜகமே தந்திரம்’.
மே 1ஆம் தேதி ரிலீஸுக்கு தயாராக இருந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது. அந்த தேதியில் படத்தின் இரண்டாம் லுக்கை வெளியிட்டது படக்குழு.
ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்த இந்த படத்திற்கு விவேக் ஹர்ஷன் எடிட்டிங் செய்கிறார்.
இந்நிலையில் தனது ‘ஜகமே தந்திரம்’ வெளியீடு குறித்துப் பேசியிருக்கும் கார்த்திக் சுப்புராஜ், “அக்டோபர் மாத இறுதியில் திரையரங்குகள் திறக்கப்பட்டால் அது திரைத்துறைக்கு நல்ல செய்தி. ‘ஜகமே தந்திரம்’ வெளியீட்டைப் பொறுத்தவரை அது தயாரிப்பாளரின் கைகளில்தான் இருக்கிறது. நான் ‘பெண்குயின்’ திரைப்படத்தைத் தயாரித்தேன். திரையரங்குக்காக எடுக்கப்பட்ட படமாக இருந்தாலும் அமேசானுக்கு விற்றோம். கையில் இருப்பதை வைத்து பிழைக்க வேண்டும் என்கிற நிலையில் நாங்கள் இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.
Patrikai.com official YouTube Channel