அறிவோம் தாவரங்களை – கொள்ளு.

கொள்ளு. (Macrotyloma uniflorum)
தெற்காசியா, ஆப்பிரிக்கா உன் தாயகம்! தென்னிந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் அதிகமாகப் பயிரிடப்படும் திவ்ய செடி நீ!
காணம், முதிரை என இரு வேறு பெயர்களில் விளங்கும் இனிய பயிர் செடி நீ!
இந்தியாவில் நீ ’குல்தி’. சமஸ்கிருதத்தில் நீ ‘குளதா களை’. சீன மொழியில் நீ ‘பியான்டௌ’
அரபுமொழியில் நீ‘அபுல்குல்’
சிறுநீரகக் கற்கள், மூலநோய், ரத்தக்கட்டி, தொப்பை, இதய நோய், காய்ச்சல், சளி, மாதவிடாய், செரிமானம், குடற்புழு, கண் நோய், மலச்சிக்கல், தோல் நோய்கள், நீரிழிவு ஆகியவற்றிற்கு ஏற்ற அற்புத மருத்துவ நிவாரணி நீ!
அவியல், துவையல், ரசம், பொரியல், சூப், பொடி எனப் பல்வேறு வகையில் பயன்படும் நல்வகைச் செடி நீ!
சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவத்தின் சிறந்த மருத்துவ நிவாரணி நீ!
“இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்குக் கொள்ளு”என்ற பழமொழிக்கு வித்தாக விளங்கும் வினோதச் செடியே!
கொழுப்பைக் குறைக்கும் இயற்கை மருந்து செடியே!
குதிரைகளின் தீவனமே!
பழுப்பு நிறத்திலும் நிலத்து நிறத்திலும் காட்சிதரும் கொள்ளுபயிரே!
பந்தயக் குதிரைகளின் உணவு செடியே!
ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கும் அற்புத கொள்ளு செடியே!
நீவிர் பல்லாண்டு வாழ்க! வளர்க! உயர்க!
நன்றி : பேரா.முனைவர். ச.தியாகராஜன்(VST)
முதல்வர்
ஏரிஸ் கலைக் கல்லூரி,
முதல்வர்
ஏரிஸ் கலைக் கல்லூரி,
வடலூர்.📱9443405050.
Patrikai.com official YouTube Channel