லக்னோ: சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
நாடு முழுவதும் ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்பட பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், சமாஜ்வாதி கட்சியின் நிறுவனரும், முன்னாள் தலைவருமான முலாயம் சிங் யாதவ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
அவருக்கு கொரோனா இருப்பதை அக்கட்சி தமது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்து கட்சியின் டுவிட்டர் பக்கத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:
சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ் கொரோனா வைரசுக்கு சாதகமாக சோதனை செய்துள்ளார். இது அவரது மருத்துவ அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
அவருக்கு கொரோனா அறிகுறிகள் ஏதும் இல்லை. மருத்துவர்கள் தொடர்ந்து அவரது உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.