சென்னை: தமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் 2வது முறையாக மேலும் 3 மாதம் நீட்டிப்பு செய்து மத்தியஅரசு உத்தரவிட்டு உள்ளது.
தமிழகத்தின் தலைமைச் செயலாளராக சண்முகம் பதவிவகித்து வருகிறார். பதவிக்காலம் ஜூலையுடன் முடியவிருந்த நிலையில் தமிழக அரசின் பரிந்துரையை ஏற்று 3 மாதம் நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டடிருந்தது. இந்நிலையில், இம்மாத இறுதியில் தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் முடியவிருந்த நிலையில் தற்போது மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சண்முகம் அரசின் தலைமைச் செயலாளராக 2019ம் ஆண்டு ஜூலை 30ம் தேதி நியமிக்கப்பட்டார். அவரது பதவி காலம் ஜூலையில் முடிவடைந்த நிலையில், தற்போது மீண்டும் நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் அடுத்தாண்டு ஜனவரி 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அவரின் பதவிநீட்டிப்பு குறித்துக ஆகஸ்ட் 13ம் தேதி தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்ததது. கொரோனா தாக்கம் சூழலை கருத்தில் கொண்டு சண்முகத்திற்கு பதவி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று தமிழக அரசு மத்திய அரசிடம் கேட்டுக் கொட்ணதற்கு இணங்கஅவருக்கு பதவிக்காலம் மேலும் 3 மாதம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, நவம்பர் 1ந்தேதி முதல் ஜனவரி 21, 2020ம் ஆண்டு வரை அவர் பணியில் தொடர்வார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.