டெல்லி: உத்தரப்பிரதேசம், உத்தரகண்ட் மாநிலத்தின் 11 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கான தேர்தல் நவம்பர் 9ம் தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்த 2 மாநிலங்களிலும் 11 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் நவம்பர் 25ம் தேதியுடன் முடிகிறது. இந் நிலையில் காலியாகும் அந்த 11 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கான தேர்தல் அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது.
அதன்படி உ.பியில் 10 இடங்களுக்கும், உத்தரகண்ட் மாநிலத்தில் 1 இடத்திற்கும் தேர்தல் நவம்பர் 9ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வாக்கு எண்ணிக்கையும் அன்றைய தினமே நடைபெறும் என்றும், அக்டோபர் 27ம் தேதிக்குள் வேட்பு மனுத்தாக்கல் செய்யவேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.