திருச்சி: மணப்பாறை அருகே மாடியிலிருந்து தவறி விழுந்த 4 வயது குழந்தையை, அந்த பகுதியில் வியாபாரம் செய்து வந்த வியாபாரி அலேக்காக கேட்ச் பிடித்து காப்பாற்றினார். அவருக்கு பாராட்டுகள் குவிக்கின்றன.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டிய பகுதியில் வசித்து வருபவர் ஜான்பீட்டர்-ஜான்ஸிமேரி தம்பதியினர். இவர்களுக்கு கவி என்ற மகளும், எட்ரிக்எழில் என்ற மகனும் உள்ளனர். தம்பதியினர் இருவரும் வேலைக்கு சென்றிருந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த குழந்தைகள், மாடிக்கு சென்று விளையாடி வந்துள்ளனர். அப்போது, எதிர்பாராதவிதமாக, எட்ரிக் எழில் மாடியிலிருந்து தவறி விழுந்துள்ளான். அந்த சிறுவனி கையைப்பிடித்து காப்பாற்றிய சிறுமி, யாராவது காப்பாற்றுங்களே என கூக்குரல் போட்டார்.
அவரது சத்தத்தை கேட்ட, சாலையில் சென்றுகொண்டிருந்த பினாயில் வியாபாரி முகமது சாலிக் என்பவர் விரைந்து வந்து, குழந்தையை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டார். அதையடுத்து, சிறுமி குழந்தையின் கையைவிட, தரையை நோக்கி வந்துகொண்டிருந்த சிறுவனை அலெக்காக கேட்ச் பிடித்து காப்பற்றினார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.
இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. வியாபாரிமுகமது சாலிக்குக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.