சென்னை :
கடந்த ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் பா.ஜ.க.. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று, மோடி இரண்டாம் முறையாக பிரதமர் பதவி ஏற்றுக்கொண்டார்.
அப்போது, தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருந்த கூட்டணி கட்சியினர் நான்கு பேருக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டது. அவர்களில் சிவசேனாவின் அரவிந்த் சாவந்த், கடந்த ஆண்டு பதவி விலகினார்.
வேளாண் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சிரோமணி அகாலிதளம் கட்சியின் ஹர்சிம்ரத் கவுர் பாதல், அண்மையில் ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில் உணவு அமைச்சராக பதவி வகித்த லோக்ஜனசக்தி கட்சியின் தலைவரான ராம்விலாஸ் பஸ்வான் நேற்று முன்தினம் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார்.
எனவே இப்போது இந்திய குடியரசு கட்சி தலைவரான ராம்தாஸ் அத்வாலே மட்டுமே, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் ஒரே அமைச்சராக நீடிக்கிறார்.
அதால்வே சமூக நீதித்துறை இணை அமைச்சராக பொறுப்பு வகிக்கிறார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் அங்கம் வகித்தாலும், அந்த கட்சி மத்திய அமைச்சரவையில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
– பா.பாரதி