கடந்த வாரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்மாக தனக்கு தானே அறிவித்துக் கொண்ட ஜனாதிபதி டிரம்ப், இந்த வாரம், தனக்கு அளிக்கப்பட்ட அதிநவீன கொரோனா வைரஸ் சிகிச்சைகளை “கடவுளிடமிருந்து வரும் அற்புதங்கள்” என்று புகழ்ந்தார். அதில் உண்மை என்னவென்றால், அவருக்கு அளிக்கப்படும் ஆன்டிபாடி சிகிச்சைகள் மனித கருக்கலைப்பின் போது வெளியேற்றப்படும் கருவின் செல்களில் முதலில் சோதிக்கப்பட்டதாகும். இதனை இந்த சிகிச்சைமுறையை உருவாக்கிய நிறுவனமான ரீஜெனெரான் பார்மாசூட்டிகல்ஸ் உறுதி செய்துள்ளது. கருக்கலைப்பின் போது முழுமையாக கருவாக உள்ள திசுக்கள் தனித்தனி செல்களாக மாற்றப்பட்டு வெளியேற்றப்படும். இந்த செல்களில் சோதிக்கப்பட்ட ஆன்டிபாடி சிகிச்சை முறையே இப்போது டிரம்புக்கு வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு, இவ்வகை செல்களில் சோதிக்கப்பட்டதன் மூலம் அந்த சிகிச்சையின் நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதேசமயம் இதுபோன்ற ஆராய்சிகளுக்கு நிதியளிப்பதை குறைக்கும் முடிவை டிரம்ப் நிர்வாகம் முடிவெடுத்தது குறிப்பிடத்தக்கது. அதை மூர்க்கத்தனமான செயல்களுக்கு எதிரான நடவடிக்கை என டிரம்ப் நிர்வாகம் வர்ணித்தது.
ஆனால் ஜனாதிபதி டிரம்ப் உயிர்கொல்லி நோயான கோவிட் -19 க்கு பதிக்கப்பட்ட போது, இம்முறையில் உருவாக்கப்பட்டு சோதிக்கப்பட்ட வழிமுறைகளைப் பயன்படுத்துவதில் எவ்வித தயக்கத்தையும் காட்டவில்லை. இதன்மூலம் அனைவரின் பாசாங்குதனமும் வெளிப்பட்டுள்ளதாக பரவலான கருத்து எழுந்துள்ளது. ஆனால் உண்மையில் ஜனாதிபதிக்கு செலுத்தப்பட்ட ஆன்டிபாடி காக்டெயில் வெள்ளெலிகளின் கரு முட்டை செல்களில் இருந்து உருவாக்கப்பட்டது எனவும், அதை சோதிக்க பயன்படுத்திய மனித செல்கள் 1970 களில் நெதர்லாந்தில் கருக்கலைப்பு செய்யப்பட்ட கருவின் சிறுநீரக திசு செல்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
அப்போதிருந்து, இந்த செல்கள் பலஇலட்சக் கணக்கான முறை பல்வேறு ஆய்வகங்களில் வளர்க்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு மரணமில்லா வாழ்வைக் கொண்டு இன்றும் பல ஆய்வகங்களில் சேமிக்கப்பட்டும் வளர்க்கப்பட்டும், பயன்படுத்தப்பட்டும் வருகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, கருகலைப்பு, குழந்தையின் செல்களை பயன்படுத்துதல் போன்ற அரசிலுக்கு இதில் இடமில்லை என கண்டிப்பாக கூறப்பட்டுள்ளது. ரீஜெனெரோனின் கூற்றுப்படி, பல ஆய்வகங்கள் இந்த செல்களை வைரஸின் பல்வேறு புரோட்டீன்களைத் தயாரிக்க பயன்படுத்துகின்றன. டிரம்பின் உயிரைக் காப்பாற்ற இரு வகையான ஆன்டிபாடிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
ரீஜெனெரான் செய்தித் தொடர்பாளர் அலெக்ஸாண்ட்ரா போவி கூறுகையில், டிரம்ப் நிர்வாகம் சமீபத்தில் நிகழ்த்திய கருக்கலைப்பு திசு பயன்படுத்தி செய்யப்படும் ஆராய்சிகளை தடுக்க முயன்றது. எடுத்துக்காட்டாக, ஆகஸ்டில், சுகாதார மற்றும் மனித சேவைகள் துறையில் உருவாக்கப்பட்ட ஒரு புதிய குழு, புதிய கரு கலைப்பு செல்களின் தேவை உள்ள ஆய்வுகளை முற்றிலும் நிராகரித்தது. மேலும், டிரம்பின் சிகிச்சைகள் சோதிக்கப்பட்ட செல்கள் பல வருடங்களாக பல ஆய்வகங்களில் பயன்படுத்தும் ஒன்று என்பதால் அதை கருகலைப்பு செல்கள் என்றே கூற முடியாது. எனவே டிரம்ப் கருகலைப்பு செல்களை பயன்படுத்தி சிகிச்சை எடுத்துக் கொண்டார் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றார்.