2020-ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த பெண் கவிஞருக்கு கிடைத்துள்ளது.
உலகின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான நோபல் பரிசு, மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய ஆறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு, ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இது 1901-முதல் ஸ்வீடிஷ் டைனமைட் கண்டுபிடிப்பாளரும், தொழிலதிபருமான ஆல்பர்ட் நோபல் அவர்களால் உருவாக்கப்பட்டு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.
அமைதிக்கான நோபல் பரிசு, ஐரோப்பிய நாடான நார்வேயிலும், பிற துறைகளுக்கான நோபல் பரிசு, ஐரோப்பிய நாடான ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமிலும் அறிவிக்கப்படுவது வழக்கம்.
கடந்த, 5ம் தேதி முதல் 2020ம் ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்படுட வருகிறது. மருத்துவத்துறைக்கும், , இயற்பியல் துறைக்கும், வேதியியல் துறைக்கும் இதுவரை அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று இலக்கியத்துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
2020-ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த பெண் கவிஞர் லூயிஸ் க்ளுக்கிற்கு ( Louise Glück) வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.