சென்னை: கொரோனா முடக்கம் காரணமாக பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, தேர்ச்சி அறிவிக்கப்பட்ட நிலையில், பொறியியல் படிப்பிலும் அரியர் மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள் என தமிழகஅரசு அறிவித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தமிழகஅரசு, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில் விதிகளுக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது என்று கூறிய நீதிபதிகள், மாணவர்கள் தேர்வுகள் எழுதாமல் எப்படி தேர்ச்சியை எதிர்பார்க்கலாம் என்றும் என்றும் கேள்வி விடுத்துள்ளது.
கொரோனா காரணமாக, பொறியியல் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், அரியல் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டதாக தமிழகஅரசு அறிவித்தது. இதை எதிர்தது தொடரப்பட்ட வழக்கின் கடந்த விசரணையின்போது, யுஜிசி மற்றும் ஏஐசிடிஇ பதில் மனுத்தாக்கல் செய்தது. அதில், அரியர் தேர்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதனால்,அரியர் மாணவர்கள் தேர்ச்சி அறிவிப்பு கேள்விக்குறியானது. . அதையடுத்து வழக்கு 7ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த நிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரியர் மாணவர்கள் ஆல் பாஸ் விவகாரத்தில் ஏஐசிடிஇ விதிகளுக்கு முரணான நிலைப்பாட்டை எடுக்க முடியாது என கூறிய உயர்நீதி மன்றம், தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற வேண்டும் என மாணவர்கள் எப்படி எதிர்பார்க்கலாம்?- நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும், அரியர் மாணவர்கள் ஆல் பாஸ் விவகாரத்தில் தமிழக அரசும், யுஜிசியும் பதில் அளிக்க நவம்பர் 20வரை அவகாசம் வழங்கி வழக்கை ஒத்தி வைத்துள்ளது.