சென்னை

தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்றிரவு மீண்டும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தேமுதிக தலைவரும் பிரபல நடிகருமான விஜயகாந்த் கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார்.

அவர் வெளிநாடு சென்று சிகிச்சை பெற்று வந்தார்.

அவருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி ஆகி அவரும் அவர் மனைவியும் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

அவருக்கு கொரோனா பாதிப்பு குணமடைந்துள்ளதாகவும் வழக்கமான சோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

 அதன்பிறகு விஜயகாந்த் மற்றும் அவர் மனைவி குணமடைந்து வீடு திரும்பினர்.

நேற்றிரவு திடீரென உடல் நிலை சரியில்லாமல் போனதால் விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் தேமுதிக தலைமை கழகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில்,

”தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் இரண்டாம் கட்ட பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார்.

கேப்டனின் உடல்நிலை குறித்து வெளியாகும் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம்”

என அறிவிக்கப்பட்டுள்ளது.