சென்னை: சென்னையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்தார்.
கொரோனா காலத்தில் ஆளுநரை 6வது முறையாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார். அவருடன் அமைச்சர்கள் கேபி அன்பழகன், சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ஆகியோரும் சென்றனர்.
சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி திரிபாதியும் முதலமைச்சருடன் சென்றனர். சந்திப்பின் போது தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆளுநரிடம் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.
மேலும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை 2 ஆக பிரிப்பது உள்ளிட்டவை குறித்தும் முதலமைச்சர் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் கூறுகின்றன.