
1980-களில் நடந்த உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்படும் படம் ‘பெல்பாட்டம்’. ரஞ்சித் எம் திவாரி இயக்கும் இந்தப் படத்தில் அக்ஷய்குமார் நாயகனாக நடிக்கிறார்.
இந்த படத்தில் அக்ஷய்குமாருடன் வாணி கபூர், ஹியூமா குரேஷி, லாரா தத்தா, தலைவாசல் விஜய் உள்ளிட்டோர் நடிக்கின்றனர் .
கொரோனா ஊரடங்கால் தடைப்பட்டிருந்த இப்படம் தற்போது லண்டனில் படப்பிடிப்புக்கு அனுமதி வாங்கியுள்ளது .
படப்பிடிப்பையும் ஒரே கட்டமாக முடிக்க திட்டமிட்டு தனி விமானம் மூலம் லண்டனுக்குப் பயணப்பட்டனர் . 8 மணி நேரப் படப்பிடிப்பு இல்லாமல், அதிகப்படியான நேரங்களைப் படப்பிடிப்புக்கு ஒதுக்கினார்கள் நடிகர்கள்.
இதனால் திட்டமிட்டபடி ஒட்டுமொத்தப் படப்பிடிப்பையும் முடித்துவிட்டதாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் அறிவித்துள்ளது படக்குழு.
தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களை ஈர்த்து வருகிறது. விமான நிலையத்தில் கையில் பேக் ஒன்றை எடுத்து கொண்டு மாஸாக நடந்து வருகிறார் அக்ஷய். பெல் பாட்டம் ஸ்டைலில் பேண்ட் அணிந்துள்ளார். கடைசியாக வந்த காட்சிகளில் வண்டியில் தொங்கிய படி செல்கிறார். படத்தில் அக்ஷய் ரா ஏஜென்ட்டாக நடித்துள்ளார் என்பதால் கதையில் ஏராளமான ட்விஸ்ட் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Patrikai.com official YouTube Channel