நேற்று பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற போட்டியாளர்கள் இனி வெளியுலக தொடர்பின்றி 100 நாட்கள் தங்கியிருக்க வேண்டும். அதுதான் போட்டியின் முதல்விதி.
இந்நிலையில் முதல்நாளான இன்று போட்டியாளர்கள் என்ன செய்தார்கள் என்பதை ப்ரமோ வீடியோக்களாக வெளியிட்டுள்ளது.
காலை வெளியான முதல் வீடியோவில், வழக்கம்போல் ஆடல், பாடல், நடனத்துடன் தொடங்கியிருக்கிறது.
இரண்டாவது வீடியோவில் சனம் செட்டி சிவானியை பார்த்து வயதுக்கான மெச்சூரிட்டி இல்லை , எக்ஸ்பீரியன்ஸ் இல்லை என பேசியுள்ளார் . மேலும் நடிகை ஷிவானியை சுரேஷ் சக்ரவர்த்தி விமர்சிக்கும் வகையில் காட்டப்பட்டு இருக்கிறது.


இந்நிலையில் மூன்றாவது புரோமோ வீடியோவில் “டிக் டிக் யாரது திருடன் “விளையாட்டை ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் விளையாடுகின்றனர். அறந்தாங்கி நிஷா அவருக்கான போட்டியாளரை துரத்திச் செல்ல தீடீரென கீழே தடுக்கி விழுகிறார். அதனைப் பார்த்து அனிதா சம்பத் மன்னிப்பு கேட்டபடி சிரித்து கொண்டிருக்க, யாரும் பதற்றப்பட வேண்டாம் என ரியோ கூறும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.