இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தல அஜித்தின் 50-வது படமான மங்காத்தா படத்தை தயாரித்தவர் தயாநிதி அழகிரி.
தூங்கா நகரம், உதயம் என்.எச்4, தகராறு, வடகறி உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார்.
வாரணம் ஆயிரம், பையா, நான் மகான் அல்ல உள்ளிட்ட பல படங்களுக்கு விநியோகஸ்தராக இருந்துள்ளார் தயாநிதி அழகிரி. சன் பிக்சர்ஸ், ரெட் ஜெயண்ட் மூவிஸ் உள்ளிட்டவைக்கு போட்டியாக கிளவுட் நயன் மூவிஸ் தொடங்கிய இவர் தயாரிப்பில் வெளியான முதல் படம் சிவாவின் தமிழ்ப்படம் தான்.
இந்நிலையில் தற்போது மாஸ்க் எனும் குறும்படத்தை இயக்கி உள்ளார் தயாநிதி அழகிரி.நடிகரும் தயாநிதி அழகிரியின் சகோதரருமான அருள்நிதி இந்த ஃபர்ஸ்ட் லுக்கை தற்போது வெளியிட்டுள்ளார்.


நடிகர் சூரியும் மாஸ்க் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு, மாஸ்க்குக்கு உள்ள மாஸான விசயம் மறைஞ்சு இருக்குன்னு மட்டும் தெரியுது. இயக்குனர் அவதாரம் எடுத்துருக்கும் பாசத்துக்குரிய தயாநிதி அழகிரி ப்ரதருக்கு மனமார்ந்த வாழ்த்துகள் என்று பதிவு செய்துள்ளார்.