பெங்களூரு: கர்நாடகாவில் அக்டோபர் 15 வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை திறக்க போவதில்லை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகளால் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. கர்நாடகாவில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று அம்மாநில கல்வித்துறை தெரிவித்திருந்தது.
இந் நிலையில் மாநிலத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்புகளால் அக்டோபர் 15ம் தேதி வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைத் திறக்க போவதில்லை என்று அதிகாரப்பூர்வமாக மாநில அரசு அறிவித்துள்ளது. பள்ளிகள் திறப்பு அதன்பிறகே முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது.