அபுதாபி: டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 15 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது டேவிட் வார்னர் தலைமையிலான ஐதராபாத் அணி.
டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி களமிறங்கிய ஐதராபாத் அணியில், துவக்க வீரரும் கேப்டனுமான வார்னர் 33 பந்துகளில் 45 ரன்கள் அடித்தார். மற்றொரு துவக்க வீரர் பேர்ஸ்டோ 48 பந்துகளில் 53 ரன்களை அடித்தார்.
கேன் வில்லியம்சன் 26 பந்துகளில் 41 ரன்களை அடித்தார். இறுதியில், 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை எடுத்தது அந்த அணி.
அடையக்கூடிய இலக்கை நோக்கி ஆடத்தொடங்கிய டெல்லி அணியில், ஷிகர் தவான் 31 பந்துகளில் 34 ரன்களையும், கேப்டன் ஷ்ரேயாஸ் 21 பந்துகளில் 17 ரன்களையும், ரிஷப் பண்ட் 27 பந்துகளில் 28 ரன்களையும் அடித்தனர்.
இறுதியில், 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து, அந்த அணியால் 147 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. ஐதராபாத் தரப்பில் ரஷித் கான் 3 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.