டாக்டர் அந்தோனி ஃபௌசி, கோவிட் -19 க்கு முன்பு இருந்தவாறு இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப எப்படியும் 2021 ஆம் ஆண்டின் இறுதி வரை ஆகலாம் என்றார். அந்தோணி ஸ்டீபன் ஃபௌசி ஒரு அமெரிக்க மருத்துவர் மற்றும் நோயெதிர்ப்பு சக்தி நிபுணர் ஆவார். இவர் 1984 முதல் தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் நிறுவனத்தின் இயக்குநராக பணியாற்றி வருகிறார். “கோவிட்டுக்கு முன்னர் நாமிருந்த இயல்பான நிலைக்குத் திரும்புவதைப் பற்றி நீங்கள் பேசுகிறீர்கள் என்றால், அது 2021 இல் அல்லது 2021 ஆம் ஆண்டின் இறுதி வரை கூட ஆகலாம்” என்று ஃபௌசி கூறினார். வேண்டுமானால், தடுப்பு மருந்துகள் உதவலாம். ஆனால், அதில் பல சிக்கல்கள் உள்ளன என்றும் கூறினார். இந்த ஆண்டு இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடமிருந்து அவசரகால அங்கீகாரத்தைப் பெறுவது சில தடுப்பு மருந்துகளுக்கு சாத்தியமாகலாம். ஆனால் அது உடனடியாக அனைவருக்கும் கிடைக்காது.
“தடுப்பு மருந்து விநியோகதிற்கு நீங்கள் ஏற்பாடும் செய்கிறீர்கள் என்றாலும், நமது மக்கள் தொகையின் பெரும்பாலானவர்களுக்கு தடுப்பு மருந்து சென்றடைய அநேகமாக 2021 இன் மத்தியில் அல்லது இறுதி வரை ஆகலாம்,” என்று அவர் எம்எஸ்என்பிசியின் ஆண்ட்ரியா மிட்செலிடம் கூறினார். இதில் ஒரு மிகப்பெரிய சிக்கல் என்பது தடுப்பு மருந்துகளை போதுமானகுளிர்ச்சியான வெப்பநிலையில் சேமித்து வைத்தல் ஆகும். சோதனையில் உள்ள கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தின் பெரும்பாலானவை உறை நிலையில் இருக்க வேண்டும். முன்னதாக வெள்ளிக்கிழமை ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் தி குளோபல் ஃபைட் ஆன்லைன் கருத்தரங்கில் பேசிய ஃபௌசி, இதை உறுதிப்படுத்தினார்.
முட்டாள்தனத்தை நீக்குதல்
கூடுதலாக, இப்போதும் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த மக்கள் செய்யவேண்டிய எதையும் பின்பற்றவில்லை என்று ஃபௌசி கூறினார். “நடத்தை மாற்றம் தேவைப்படும் ஒரு சூழ்நிலையை கையாளும் போது, அமெரிக்காவில் நாங்கள் ஒரு குறிப்பிடத்தக்க பிரச்சினையைச் சந்தித்தோம். நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன்” என்று அந்த இணைய வழி கருத்தரங்கில் ஃபௌசி கூறினார். “இது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. சில மாநிலங்கள் மற்றும் நகரங்கள் மற்றும் மாவட்டங்களில், மதுக்கடைகளில் வீடுகளில் உள்ளதைப் போல மக்கள் கூட்டம் கூட்டமாக காணப்பட்டதை நீங்கள் கண்டிருக்கலாம். இது ஆபத்தான நிகழ்வு. மேலும், இளைஞர்கள் தாங்கள் ஆபத்தான நோயால் பாதிக்கப்பட போவதில்லை என்று எண்ணி கவனக் குறைவாக இருந்தார்கள்,” என்று ஃபௌசி கூறினார். “ஆனால் அவர்கள் மறந்து போனது என்னவென்றால், பெருந்தொற்று பரவலைத் தடுக்க ஒத்துழைப்பது அவர்களின் சமூகக் கடமை என்பதை.” ஏனெனில், அவர்கள் நோய்த்தொற்றுக்கு ஆளானால், அவர்களால் வேறு ஒருவர் பாதிப்படைவார். பின்னர் அவர்கள் தீவிரத் தொற்றுக்கு ஆளாகக் கூடிய ஒருவரை பாதிக்கலாம். கடுமையான விளைவுகள் ஏற்படலாம். மேலும், மக்கள் தவறான தகவல்களை பரப்புகிறார்கள், இது வைரஸை எதிர்த்துப் போராடுவதை விட கடினமானது.
தற்போது கொரோனா பற்றிய செய்திகளே முன்னணியில் இருப்பதால், மக்கள் காய்ச்சலை மறந்துவிடக்கூடாது என்றும் ஃபௌசி எச்சரித்தார். “பல ஆண்டுகளாக நான் கற்றுக்கொண்ட ஒன்று, காய்ச்சலைத் தாண்டிய எதையும் பின் தள்ள வேண்டாம் – எதையும் குறைவானதாக எடைபோடாதீர்கள்” என்று அவர் எம்எஸ்என்பிசி நேர்காணலின் போது கூறினார். காய்ச்சல் பருவத்திற்கு வரும்போது “சாத்தியமான நல்ல செய்தி குறிப்பு ஒன்று” உள்ளது. ஆஸ்திரேலியாவில், காய்ச்சல் காலம் முடிவடைந்த நிலையில், “அவர்கள் காய்ச்சலை குறைத்து மதிப்பிட்டு மிக இலகுவான எடுத்துக் கொண்டனர். ஏனெனில் அவர்கள் SARS-CoV2 தொற்றுநோய்களைத் தடுப்பதற்கான காரியங்களைச் செய்வதில் கவனம் செலுத்தினர். முகக்கவசம், தூரத்தை பின்பற்றுவது, கூட்டத்தைத் தவிர்ப்பது, வெளிப்புறத்தை விட அதிகமாக வீடுகளின் உட்புறத்தில் கவனமாக இருப்பது என காய்ச்சலை இரண்டாம்பட்சமாக எண்ணி கொரோனாவிற்காக வேலை செய்ததால், இந்த ஆண்டு இன்ஃப்ளூயன்ஸா நோயாளிகளின் எண்ணிக்கையும் மிக குறைந்த அளவே இருந்தது,”என்று அவர் கூறினார். அமெரிக்கர்கள் இதைச் செய்ய முடிந்தால், இங்கேயும் காய்ச்சல் காலம் மிதமாகவே இருக்கும் என்று அவர் நம்புவதாக கூறினார்.