
துபாய்: பெங்களூரு அணி நிர்ணயம் செய்த 202 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பயணித்து வரும் மும்பை அணி, 12 ஓவர்களில் 83 ரன்களை மட்டுமே அடித்து 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்துள்ளது.
தற்போதைய நிலையில், அந்த ணி 48 பந்துகளில் 119 ரன்களை அடிக்க வேண்டும் என்ற கடும் நெருக்கடியில் உள்ளது.
அணியின் கேப்டனும் துவக்க வீரருமான ரோகித் ஷர்மா, 8 பந்துகளில் 8 ரன்களை மட்டுமே அடித்து ஆட்டமிழக்க, மற்றொரு துவக்க வீரர் குவின்டன் டி காக் 15 பந்துகளில் 14 ரன்களைத்தான் அடித்தார்.
சூர்யகுமார் டக் அவுட்டாக, ஹர்திக் பாண்ட்யா 13 பந்துகளில் 15 ரன்களுக்கு நடையைக் கட்டினார். தற்போது பொல்லார்டு மற்றும் இஷான் கிஷன் ஆடி வருகின்றனர்.
Patrikai.com official YouTube Channel