துபாய்: மும்பை அணிக்கெதிரான போட்டியில், 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 201 ரன்களை குவித்துள்ளது பெங்களூரு அணி. இதனால், மும்பை வெற்றிபெறுவது இன்று எளிதான ஒன்றாக இருக்காது என்று நம்பப்படுகிறது.

பெங்களூரு அணியின் படிக்கல் 40 பந்துகளில்(2 சிக்ஸர் & 5 பவுண்டரிகள்) 54 ரன்களும், ஆரோன் பின்ச் 35 பந்துகளில்(1 சிக்ஸர் & 7 பவுண்டரிகள்) 52 ரன்களும், டி வில்லியர்ஸ் 24 பந்துகளில்(4 சிக்ஸர்கள் & 4 பவுண்டரிகள்) 55 ரன்களும், ஷிவம் துபே 10 பந்துகளில்(3 சிக்ஸர்கள் & 1 பவுண்டரி) 27 ரன்களும் அடித்து, அந்த அணி 200 ரன்களைக் கடக்க உதவினர்.

மும்பை அணியின் அதிரடி வேகப்பந்து வீச்சாளர்களால் இன்றைய போட்டியில், எதிர்பார்த்த தாக்கம் செலுத்த முடியவில்லை.

பும்ரா 4 ஓவர்கள் வீசி 42 ரன்களும், ஜேம்ஸ் பேட்டிஸன் 4 ஓவர்கள் வீசி 51 ரன்களும் விட்டுக் கொடுத்தனர். பெளல்ட் மட்டுமே 4 ஓவர்களில் 34 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்தார். பாண்ட்யா மட்டுமே 3 ஓவர்களுக்கு 23 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார்.