சென்னை:

க்டோபர் மாதத்துக்கான ரேஷன் பொருட்களை பெறுவதற்கு நாளை முதல் டோக்கன் வினியோகம் செய்யப்பட உள்ளது.

ரேஷன் கடைகளில் அக்டோபர் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்களை குடும்ப அட்டைதாரர்கள் பெற ஏதுவாக நாள் ஒன்றுக்கு 225 குடும்ப அட்டைகளுக்கு மிகாமல் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வழங்கும் நாள், நேரம் போன்ற விவரங்களை குறிப்பிட்டு டோக்கன்கள் 28-ந்தேதி (நாளை) முதல் 30-ந்தேதி வரை, வீடுகளுக்கே சென்று ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் வழங்கப்படும்.


மேலும் அட்டைதாரர்கள் டோக்கன்களில் குறிப்பிட்ட தேதி, நேரத்தில் மட்டும் பொருட்கள் வாங்க வர வேண்டும். மற்ற நேரத்தில் அவர்களுக்கு பொருட்கள் வழங்கப்படாது. இதை காவல்துறையினர் மூலம் ஒலிப்பெருக்கி மூலம் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். அந்தியோதயா அன்னயோஜனா அட்டைதாரர்களுக்கு இம்மாதமும் குடும்ப அட்டை ஒன்றுக்கு தலா ஒரு கிலோ கோதுமை வழங்கப்படும்.

ரேஷன் கடைகளில் பொருட் கள் பெற வரும் அட்டைதாரர் கள் ஒரு மீட்டர் இடைவெளியில் தனிமைப்படுத்தி பொருட் கள் வாங்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அட்டைதாரர்களுக்கு முககவசம் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த தகவலை உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளர் சஜ்ஜன்சிங்ரா சவான் தெரிவித்துள்ளார்.