அகமத்நகர்
எதிரி நாட்டு பீரங்கிகளை தகர்க்கும் ஏவுகணை சோதனையை இந்திய விஞ்ஞானிகள் வெற்றிகரமாக முடித்துள்ளனர்.
எதிரி நாட்டு பீரங்கிகளை தகர்த்து அழிக்கும் ஏவுகணையை டி ஆர் டி ஓ உருவாக்கி உள்ளது.
இந்த ஏவுகணையை மகாராஷ்டிர மாநிலம் அகமத் நகரில் இந்திய விஞ்ஞானிகள் சோதனை செய்தனர்.
எம் பி டி அர்ஜுன் டாங்கியில் பொருத்தப்பட்ட இந்த ஏவுகணை மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இலக்கை நோக்கி செலுத்தப்பட்டது.
அப்போது ஏவுகணை துல்லியமாக இலக்கை தாக்கியதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்,
இதையொட்டி டி ஆர் டி ஓ விஞ்ஞானிகளுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் இதன் மூலம் முக்கிய ஆயுதங்களை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்வது குறையும் என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.