பஹ்ரைன்: இஸ்ரேல் நாடு உருவான பிறகு முதல்முறையாக, அங்கிருந்து பஹ்ரைனுக்கு நேரடி விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.
டெல் அவிவில் நகரத்தில் இருந்து புறப்பட்ட இந்த விமானம் 3 மணி நேரம் பயணித்து, பஹ்ரைன் வந்து சேர்ந்தது. விமானத்தில் அமெரிக்க, இஸ்ரேல் அதிகாரிகள், அதிபர் டிரம்பின் மருமகன் குஷ்னெர் உள்ளிட்டோர் பயணித்தனர்.
இஸ்ரேலை தனி நாடாக அறிவிக்கப்பட்டதற்கு மத்திய கிழக்கு நாடுகள், ஐக்கிய அரசு அமீரகம் உள்ளிட்ட அரபு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. பல ஆண்டுகளாக முடிவு பெறாமல் இருந்த இப்பிரச்னை முடிவுக்கு வந்தது.
இஸ்ரேல் ஐக்கிய அரபு அமீரகம் இடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சியால் வரலாற்று சிறப்பு மிக்க அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. இதையடுத்து, டிரம்ப் முன்னிலையில், இஸ்ரேல், பக்ரைன், யுஏஇ நாடுகளிடையே கடந்த 15ம் தேதி முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது.