ரியாத்: கொரோனா பரவலை மேற்கோள் காட்டி சவூதி அரேபியா இந்தியாவுக்குச் செல்லும் மற்றும் புறப்படும் விமான சேவையை நிறுத்தி உள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரிப்பதைக் கருத்தில் கொண்டு, சவூதி அரேபியா, இந்தியா உள்ளிட்ட 3 நாடுகளுக்கான விமானங்களை நிறுத்தி வைத்துள்ளது. இந்தியா தவிர்த்து, பிரேசில் மற்றும் அர்ஜென்டினா ஆகிய நாடுகளுக்கும் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
இந்திய விமான நிறுவனங்கள் இப்போது சவூதி அரேபியாவுக்கு எந்த விமானங்களையும் இயக்க அனுமதிக்கப்படாது. வளைகுடா நாட்டிலிருந்து எந்த விமானங்களும் செப்டம்பர் 24 முதல் இந்தியாவுக்கு.பறக்க அனுமதிக்கப்படாது என்று அரசு உத்தரவை மேற்கோள்காட்டி விமான நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுகள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு சவூதி அரேபியா இந்த நடவடிக்கை எடுத்துள்ளது என்பது தெளிவாகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.