சீனா:
நேபாளத்திற்கு சொந்தமான இடத்தில் ஒன்பது கட்டிடங்களை நிர்மாணித்துள்ளது சீனா. மேலும் இப்பகுதியில் எந்த நேபாள அதிகாரியும் அனுமதிக்கப்படவில்லை, நேபாள பாதுகாப்பு படையினர் இல்லாததால் சீனர்கள் இந்த பிராந்தியத்தில் நிலங்களை படிப்படியாக கைப்பற்றுவது பற்றி திட்டமிட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் நேபாளத்தில் உள்ள மாவட்டத்தில் சீனர்கள் திருட்டுத்தனமாக ஒரு கட்டிடத்தை எழுப்பியுள்ளனர். ஒரே கிராமத்தில் மொத்தம் ஒன்பது கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. அந்த இடத்தை சேர்ந்தவர்கள் கட்டிடத்தின் அருகில் அனுமதிக்கப்படவில்லை, நேபாள ஊர்வாசிகள் உள் நுழைய சீனா தடை விதித்துள்ளது.
கிராம சபை தலைவர் விஷ்ணு பகதூர் லாமா, ஒரு வழக்கமான சுற்றுப்பயணம் சென்றபோது, இந்த விஷயம் முதலில் வெளிச்சத்திற்கு வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சீன மக்கள் விடுதலை ராணுவம் கிராமத்தில் 9 கட்டிடங்களை கட்டி முடித்து உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தனது தொலைபேசியை பயன்படுத்தி அந்த கட்டிடங்களின் புகைப்படங்களை எடுத்த விஷ்ணு பகதூர் லாமா, சீனா-நேபாளம் எல்லையில் நேபாளத்திற்கு சொந்தமான இடத்தில் அந்த கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது, இதைப் பற்றி மாவட்ட அதிகாரி சிரஞ்சீவி கிரியை கேட்டபோது அவர் இதைப் பற்றி தனக்கு எதுவுமே தெரியாது என்று தெரிவித்துள்ளதாக விஷ்ணு பகதூர் லாமா என்று தெரிவித்துள்ளார்.
இருப்பினும் அந்நாட்டின் வெளியுறவு துறை அமைச்சரான பிரதீப் குமார் சீனாவால் நேபாளத்தின் இடங்கள் அபகரிக்கப் படுகிறது என்ற கருத்தை மறுத்துள்ளார்.